பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் ! முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திய நகர்மன்ற குழு தலைவர்!

0
165
Periyakulam Municipal Council Monthly Meeting! The head of the city council emphasized the main demands!
Periyakulam Municipal Council Monthly Meeting! The head of the city council emphasized the main demands!
பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் ! முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திய நகர்மன்ற குழு தலைவர்!
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் நகரமன்ற தலைவர் சுமிதா தலைமையிலும் நகராட்சி ஆணையாளர் புனிதன் முன்னிலையிலும் நடைபெற்றது.கூட்ட.த்தில் அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.பெரியகுளம் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும்,முழு உருவ வெண்கல சிலை வைக்க நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கி தர வேண்டும் எனவும்,பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக அமைந்துள்ள மூன்றாந்தல் காந்தி சிலை அருகில் உள்ள தனியார் மதுபான கடையையும்,பவள தியேட்டர் எதிரில் உள்ள மதுபான கடையையும் நகர் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டனர்.
1 முதல் 30 வார்டு வரை அடிப்படை வசதிகள், குடிநீர் வசதிகள், தானியங்கி மின் விளக்குகள் அமைக்க கோரியும், வராகநதியில்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும்,நகர் பகுதியில் விளையாட்டு மைதானங்கள் பூங்காக்கள் அமைப்பதோடு மட்டுமில்லாமல் அதனை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் எனவும்,நகர் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சரி செய்து அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் எனவும்,கடைவீதியின் பெயரை மாற்றம் செய்து களமாரியம்மன் (பஜார்) வீதி என்றும் அதன் முகப்பில் ஆர்ச் அமைத்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
துப்புரவு பணியாளர்களுக்கு மாத சம்பளம் முறையாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், நகர் பகுதியில்உள்ள நீர் தேக்க தொட்டிகளுக்கான மின்சாரம் கட்டணம் கட்டாததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அவல நிலையை உடனடியாக போக்க வேண்டும் எனவும்,நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் தினந்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் சேதம் அடைந்துள்ள குப்பை வண்டிகளை பழுது நீக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும்,தென்கரை நகராட்சி கொய்யா தோப்பு  இடத்தில் அமைக்கப்பட உள்ள பூங்கா விளையாட்டு மைதானங்களை கட்டி விரைவில் முடிக்க வேண்டும் என்றும் கேட்டனர்.
அதோடு மட்டுமில்லாமல் பூங்காவையும் விளையாட்டு மைதானத்தையும் உரிய முறையில் நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் எனவும்,நகராட்சியில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மொத்தம் எத்தனை பேர்பணி
புரிகிறார்கள் என தெரிவிக்க வேண்டும் எனவும் நகர்மன்ற ஆணையாளரும் இதர பணியாளர்களும் நகர்ப்பகுதி முழுவதும் ஆய்வு நடத்த வேண்டும் எனவும்-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
Previous articleதுப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை அள்ளிய அஜித் அணி!
Next articleசிம்புவுடன் ஏ ஆர் முருகதாஸ் திடீர் சந்திப்பு… கோலிவுட்டின் ஹாட் டாபிக்!