பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்! 53 தீர்மானங்கள் நிறைவேற்றம்!   

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்! 53 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அலுவலக கணக்கு, அலுவலர் திருப்பதி வரவேற்புரையாற்றி, தீர்மான நகலை வாசித்தார். 53 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள், சண்முகவள்ளி, ரேவதி அசோக், செல்வி அன்னப்பிரகாஷ், தேவரலிங்கம்மாள்  சேகர், பாண்டியம்மாள் பாலு, ராசு, சரவணன், செல்வம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  துணைத் தலைவர் மருதையம்மாள் சாஸ்தா நன்றியுரையாற்றினார்.

Leave a Comment