மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு இந்த ஒரு இலை!! இதை எண்ணையில் காய்ச்சி தைலம் போல் தடவுங்கள்!!

Photo of author

By Divya

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு இந்த ஒரு இலை!! இதை எண்ணையில் காய்ச்சி தைலம் போல் தடவுங்கள்!!

முதியவர்கள் சந்தித்த வரும் நோயாக இருந்த மூட்டு வலி தற்பொழுது இளம் வயதினரையும் பாதித்து வருகிறது.உடல் பருமன்,ஊட்டச்சத்து குறைபாடு,எலும்பு தேய்மானம்,ஜவ்வு தேய்மானம் போன்ற பல காரணங்களால் மூட்டு வலி ஏற்படுகிறது.இதை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா இலை
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 கப் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 10 முதல் 15 புதினா இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும்.

10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைப்பதன் மூலம் அவை சுண்ட ஆரம்பிக்கும்.இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் மூட்டு பகுதியை வெந்நீர் கொண்டு துடைத்து விட்டு பின்னர் தயாரித்து வைத்துள்ள புதினா எண்ணெய் சிறிதளவு தடவி மசாஜ் செய்யவும்.தினமும் இந்த புதினா எண்ணெயை மூட்டுகளுக்கு தடவி வந்தால் இளமை பருவ மூட்டு வலி மற்றும் முதுமை காலத்தில் வரக் கூடிய மூட்டு வலி முழுமையாக குணமாகும்.

அதேபோல் தேங்காய் எண்ணெயில் கற்பூரம்,புளி,கல் உப்பு போட்டு காய்ச்சி வடிகட்டி மூட்டுகளில் தேய்த்து வந்தாலும் மூட்டு வலி,மூட்டு வீக்கம் குறையும்.