மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு! ஒரு ஸ்பூன் சுக்கு பொடி!
நீண்ட நாள் மூட்டு வலி படிப்படியாக குணமடையச் செய்யும் மருத்துவ குறிப்பினை இந்த பதிவு மூலமாக காணலாம்.
மூட்டு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஓர் பாதிப்பு ஆகும். ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காமல் இருப்பதன் காரணமாக எலும்புகள் வலுவிழந்து எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதனை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம்.
இரண்டு பெரிய வெங்காயம் இதில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட் உள்ளது.இது எலும்புகளுக்கு வலிமை தரக்கூடிய அருமருந்தாக செயல்படுகிறது. மஞ்சள் இதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் உடலுக்கு பலவிதமான நோய்களுக்கு மருந்தாகவும் உதவுகிறது . சுக்கு பொடி இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் நம் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
ஒரு ஸ்பூன் சுக்கு பொடியினை பாலுடன் கலந்து பருகி வருவதன் காரணமாக எலும்புகளுக்கு வலுவினை கொடுத்து எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வராதவாறு பாதுகாத்து கொள்கிறது.
இரண்டு வெங்காயச்சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் மஞ்சத்தூள், ஒரு ஸ்பூன் சுக்குப்பொடி ஆகியவற்றை நன்றாக கலந்த பிறகு மூட்டு வலி உள்ள இடங்களில் இதனை பத்து போன்று தடவுவதன் காரணமாக படிப்படியாக நீண்ட நாள் மூட்டு வலி குறைவதற்கு உதவுகிறது.