ஒற்றை தலைவலிக்கு நிரந்தர தீர்வு.. இந்த ஹோம் ரெமிடியை மட்டும் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

தலைவலி என்பது அனைவருக்கும் ஏற்படக் கூடிய சாதாரண பாதிப்பு தான்.சாதாரண தலைவலியை காட்டிலும் ஒற்றை தலைவலி ஏற்பட்டால் மிகவும் மோசமான வலியை ஏற்படுத்தும்.ஒற்றை தலைவலி வந்தால் இரண்டு,மூன்று நாட்களுக்கு கூட நீட்டிக்கும்.

ஒற்றை தலைவலியின் அறிகுறிகள்:-

1)பார்வைப் புலத்தில் மாற்றம் உண்டாதல்
2)அதீத தலைவலி
3)குமட்டல்
4)மயக்கம்
5)காய்ச்சல்
6)அடிக்கடி சிறுநீர் கழித்தல்
7)கவனம் சிதறல்

ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்:-

உடல் வெப்பம் அதிகரித்தால் ஒற்றை தலை ஏற்படும்.ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டால் ஒற்றை தலைவலி உண்டாகக் கூடும்.அதிக குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதால் ஒற்றை தலைவலி ஏற்படும்.இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படக் கூடும்.

ஒற்றை தலைவலி வராமல் இருக்க இயற்கை வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)பால்
3)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் பால் ஊற்றி சூடாக்கவும்.அடுத்து சிறிய துண்டு சுக்கை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.இந்த சுக்கு பொடியை கொதிக்கும் பாலில் சேர்க்கவும்.இரண்டு நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு ஒரு தேக்கரண்டி தேனை சுக்கு பாலில் கலந்து குடித்தால் ஒற்றை தலைவலி நீங்கும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)தும்பை இலை
2)தும்பை பூ

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.பிறகு சிறிது தும்பை இலை மற்றும் தும்பை பூவை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை நீரில் கலந்து கொதிக்க வைத்து ஆவி பிடித்து வந்தால் ஒற்றை தலைவலி நீங்கும்.