சென்னையில் தனியார் பேருந்து இயக்க அனுமதி! மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

0
506
permission-to-operate-private-buses-in-chennai-announcement-issued-by-the-municipal-transport-corporation
permission-to-operate-private-buses-in-chennai-announcement-issued-by-the-municipal-transport-corporation

சென்னையில் தனியார் பேருந்து இயக்க அனுமதி! மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடப்பாண்டில் 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகர போக்குவரத்து கழக சார்பில் சென்னையில் மொத்தம் 625 வழித்தடங்களில் 3400 க்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மேலும் 31 பனிமனைகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தினந்தோறும் 29 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இதில் பெண்களுக்கு இலவச சேவை, முதியவர்களுக்கு இலவச சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், மாதாந்திர கட்டண பாஸ் என பயணிகளின் வசதிக்காக பல்வேறு வகையான திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற நகரங்களில் தனியார் நிறுவனங்களின் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னையில் அரசின் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஏசி உட்பட 4 வகை பேருந்துகளை மாநகர் போருக்கு கழகம் இயக்கி வருகிறது. இதனை தொடர்ந்து  பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கும் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்குவது தொடர்பாக மாநகர் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக பேருந்து சேவை வழங்குவதற்கான தனியார் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் தனியார் பேருந்து நிறுவனங்களிடம் ஒப்பந்தம் புள்ளிகள் கூறியுள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் மாநகரப் போக்குவரத்து கழகத்திடம் விண்ணப்பித்து வருகிறது.

தரம் மற்றும் செலவு அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் முதலில் 500 பேருந்துகள் இயக்கப்பட திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து இதில் கிடைக்கும் பலனை பொறுத்து 2025 ஆம் ஆண்டு 500 பேருந்துகளையும் இந்த திட்டத்தின் கீழ் இயக்கம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கூடுதலாக ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். இதனால் மக்கள் அதிகளவில் பயன் அடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மாநகரப் போக்குவரத்து கழகம் இயக்கி  வரும் வழித்தடங்களிலும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  மாநகர் போக்குவரத்துக் கழகம் தான் கட்டணத்தை நிர்ணயம் செய்யும். அதன்படி ஒவ்வொரு நாளும் வசூல் செய்யப்படும் தொகையை தனியார் பேருந்துகள் மாநகர  போக்குவரத்து கழகத்திடம் கொடுக்க வேண்டும்.

நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதலாக இருந்தால் அந்த கூடுதல் தொகை மாநகர போக்குவரத்து களத்திற்கு செல்லும். மேலும் குறைவாக இருந்தால் இழப்பு தொகையை மாநகரப் போக்குவரத்து கழகம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் என சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப்  திட்டத்தின் கீழ் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Previous articleபொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!
Next articleவேகமாக படையெடுக்கும் இன்புளூயன்சா ஏஎச்3என்2 வகை வைரஸ் பரவல்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!