பாலியல் பலாத்காரத்தால் உருவான 27 வார கருவை கலைக்க அனுமதி-உச்ச நீதிமன்றம் அதிரடி!!
உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.கடந்த காலங்களை காட்டிலும் தற்பொழுது ஊடகங்களின் வளர்ச்சியால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளி வருகின்றது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து தயங்காமல் வெளியில் சொல்வதால் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்று தர முடிகின்றது.இருந்த போதிலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைந்த பாடில்லை.பெண்கள் பெரும்பாலும் குடும்ப உறவினர்களாலே இந்த கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர் என்பது தான் நிதர்சனம்.
இவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குஜராத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் 27 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் உச்சநீதிமன்றதில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இதனை அவரச வழக்காக ஏற்று கடந்த சனிக்கிழமை சிறப்பு அமர்வு அமைத்து நீதிபதி பிவி நாகரத்னா தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை செய்து அவர் வயிற்றில் வளர்ந்து வரும் கருவை கலைக்க முடியுமா? இயலாத? என்பது தொடர்பான அறிக்கையை ஞாயிற்று கிழமை தாக்கல் செய்வதற்கான உத்தரவை மருத்துவ குழுவிற்கு பிறப்பித்தார்.இதையடுத்து மருத்துவ குழு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டனர்.இதையடுத்து அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க முடியும்.இதற்கு அந்த பெண்ணின் உடல் ஒத்துழைக்கும்.அதனால் அவருக்கு கருக்கலைப்பு செய்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்ற எழுத்து பூர்வமான பரிந்துரையை நேற்று மாலை உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ குழுவினர் தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை இந்த வழக்கின் விசாரணையானது மீண்டும் எடுத்து கொள்ளப்பட்டது.இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் எதிர் உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கியது.இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்பது கூட தெரியாத? என்று குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு கடும் கோபத்துடன் கேள்விகளை முன்வைத்தனர்.இந்த வழக்கை பொறுத்தவரை குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிக ஏற்கனவே கால தாமதம் ஏற்படுத்தி இருக்கிறார்.ஏன் இதுபோன்ற பொறுப்பற்ற செயலில் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி செயல்பட்டார் என்ற கேள்வியை முன்வைத்தனர்.இதையடுத்து மருத்துவ குழுவின் பரிந்துரையின் படி பாதிக்கப்பட்ட சிறுமி தனது 27 வார கர்ப்பத்தை கலைக்க இந்த நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.அவர் ‘பாருச்’ மருத்துவமனையில் இன்று மாலை அல்லது நாளை காலை கருகலைப்பு செய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பிவி நாகரத்னா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.