இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

Photo of author

By Anand

நாடு முழுதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருவதையடுத்து அதனை தடுக்க கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வாகனங்கள் போக்குவரத்து குறைந்ததால் அன்று முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்தன.

இந்நிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கணிசமாக உயர்த்தத் தொடங்கின.ஜுன் மாதம் இறுதி வரை இந்த விலை உயர்வு தொடர்ந்தது .

இதனையடுத்து சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுபாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருவதால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. இதனால் ஜூன் மாத இறுதியில் இருந்த விலை எந்த மாற்றமும் இல்லாமல் தற்போது வரையில் தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக வாகனப் போக்குவரத்து இன்னும் முழுமையாகத் தொடங்காத நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவையானது மிகவும் குறைவாக இருக்கிறது.

சென்னையில் இன்று (ஜூலை 25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது ரூ.83.63 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலையானது ரூ.78.73 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.இதே போல நாட்டின் மற்ற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரங்கள் பின்வருமாறு:

டெல்லி:

பெட்ரோல் விலை – ரூ.80.43

டீசல் விலை – ரூ.81.64

கொல்கத்தா:

பெட்ரோல் விலை – ரூ.82.10

டீசல் விலை – ரூ.76.77

மும்பை:

பெட்ரோல் விலை – ரூ.87.19

டீசல் விலை – ரூ.79.33

இந்நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுபாடுகள் இம்மாத இறுதி வரையில் இருக்கும் என்பதால் அதுவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.