மீண்டும் அதிகரித்த பெட்ரோல் ,டீசல் விலை !

Photo of author

By Parthipan K

பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 100ஐ தாண்டி பல நாட்களாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது.

பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் இவ்வாறு விலை உயர்வு ஏற்படுகிறது.

100ஐ தாண்டிய எரிபொருள் விலையால் வாகன ஓட்டிகள் பெரும் சங்கடத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.104.83 க்கும், டீசல் லிட்டர் ரூ.100.92 க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.101.25 விற்பனையாகிறது. இந்த விலை உயர்வானது இன்று காலை அமலுக்கு வந்தது.