மீன ராசி – இன்றைய ராசிபலன்! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

0
177
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீன ராசி – இன்றைய ராசிபலன்! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். தொழில் மற்றும் வியாபாரம் மிக சிறப்பான பாதையில் செல்லும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகள் இனிமையாக நடைபெறும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த சில பிரச்சனைகள் தீர்ந்து சந்தோசமான சூழ்நிலைகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகர ராசி- இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleமீன் கழுவ தண்ணீரை இனி கீழே ஊற்ற வேண்டாம்!! இதை இப்படி பயன்படுத்தலாம்!