தூத்துக்குடி மாவட்டத்தில் குப்பையை எரிக்கச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
310
Pity what happened to the woman who went to burn garbage in Tuticorin district! A lot of excitement in the area!
Pity what happened to the woman who went to burn garbage in Tuticorin district! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் குப்பையை எரிக்கச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாயர் புரம் அருகே உள்ள பட்டாணி விலை நேரு தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி டெல்பின் (51). இவர்களுக்கு நியூனா(23). என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சாயர்புரம் மெயின் பஜாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டெலிபின் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

மேலும் கடந்த 22ஆம் தேதி டெல்பின் அவர்களின் வீட்டில் காம்பவுண்டுக்குள் குப்பைகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தீயானது டெல்பின் மீது பட்டது. அந்த தீ விபத்தில் பலத்த காயம் அடைந்த டெல்பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று டெல்பின்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நியூனா சாயர்புரம் போலீசாரில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகர்நாடகா டூ கன்னியாகுமரி …. ஒரு வழியாக பத்து தல ஷூட்டிங்கில் சிம்பு
Next articleஅழகு சுந்தரனுக்கு இதோட அஞ்சாவது கல்யாணமா!. போலீசாரிடம் புகார் அளித்த நாலாவது மணப்பெண்!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here