அழகு சுந்தரனுக்கு இதோட அஞ்சாவது கல்யாணமா!. போலீசாரிடம் புகார் அளித்த நாலாவது மணப்பெண்!..

0
118
This is the fifth wedding for the beautiful Sundaran! The fourth bride who complained to the police!..
This is the fifth wedding for the beautiful Sundaran! The fourth bride who complained to the police!..

அழகு சுந்தரனுக்கு இதோட அஞ்சாவது கல்யாணமா!. போலீசாரிடம் புகார் அளித்த நாலாவது மணப்பெண்!..

கடலூர் மாவட்டம் வேலூர் குப்பத்தை சேர்ந்தவர் தான் காயத்ரி.இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்பருடன் இரு வீட்டார் சம்மதத்துடன்   திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக பெண் வீட்டார் வரதட்சணையாக ஆறு சவரன் நகையும் மற்றும் அவர்களுக்கு தேவையான வீட்டு பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

இது பத்தாது என்று சீனு மனைவியிடம் அடிக்கடி கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இரண்டு வருடமாக அந்த பெண்ணை சித்திரவதை செய்து வந்துள்ளார். இது பற்றி அறிந்த காயத்ரியின் பெற்றோர் மருமகன் கண்டித்துள்ளார்.

மேலும்  சீனு நடவடிக்கை குறித்து விசாரணை செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்து. இந்த தகவலில் சீனுக்கு ஏற்கனவே மூன்று பெண்களுடன் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. சீனுக்கு இது காய்த்ரியோட சேர்த்து நான்காவது திருமணம் ஆகும்.

மேலும் ஐந்தாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக சீனு பேசி கொண்டிருக்கிறார் என்று சீனு மாமியார் கூறியிருந்தார். இதையடுத்து மோசடி செய்து திருமணம் செய்த கணவன் மீது மனைவியே காவல் நிலையத்திற்கு சென்று  புகார் அளித்தார்.

இந்த புகாரையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சீனுவை போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K