கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தூத்துக்குடி ,ராமநாதபுரம், சிவகங்கை,தஞ்சாவூர் ,திருவாரூர் ,புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவாரூர் ,தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.நாளை தமிழ்நாடு ,புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும் ,வட தமிழகம் ,புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவித்துள்ளனர்.
மேலும் டிசம்பர் 7 ஆம் தேதி புதுக்கேட்டை தஞ்சாவூர், திருவாரூர் ,நாகை உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.