நான்கு நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்!

Photo of author

By Parthipan K

நான்கு நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்!

கடந்த வாரங்களாகவே தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வந்தது.அதற்கு காரணமாக தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று புயலாக மாறியது. அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி கனமழை பெய்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை அளித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.புயல் கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலனா மாவட்டங்களில் கனமழை பெய்தது.மேலும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அனைத்து முடிந்த நிலையில் நேற்று முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிழக்கு திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் கிழக்கு திசை மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் உள் மாவட்டங்களில் குளிர்ந்த  வானிலை நிலவக்கூடும் எனவும் வட தமிழக மாவட்டங்களில் அதிகாலையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.அதனை தொடர்ந்து சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.