உயிரை பணயம் வைத்து விளையாடிய வீரர்கள்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்பின் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது.

இந்த தொற்று பரவி கொண்டிருக்கும் நிலையிலும் வீரர்களின் உயிர்களை பணயம் வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விளையாட சம்மதம் தெரிவித்தது. இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசும்போது இந்த செயலிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாட வேண்டும் மேலும் இங்கு விளையாடுவது உங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்று கூறினார்.