தயவு செய்து சினிமாவை தொடருங்கள் டியர் அல்போன்ஸ் புத்ரன்! இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் பதிவு எக்ஸில் வைரல்!!

Photo of author

By Sakthi

தயவு செய்து சினிமாவை தொடருங்கள் டியர் அல்போன்ஸ் புத்ரன்! இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் பதிவு எக்ஸில் வைரல்!!

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் சினிமாவில் இருந்து விலகுவது குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை போஸ்ட் செய்தார். இது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

நேரம், பிரேமம், கோல்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் அவர்கள் தற்பொழுது தமிழில் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் நடிக்கும் கிப்ட் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் அவருடைய சமூக வலைதளத்தில் பக்கத்தில் பதிவு ஒன்றை போஸ்ட் செய்து அதை டிலேட் செய்திருந்தார்.

இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் பதிவிட்ட அந்த போஸ்டில் “நான் திரையரங்குகளுக்கான திரைப்படங்களை இயக்குவதில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆப்டிசம் ஸ்பெக்ட்ரம் நோய் உள்ளது. நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. தொடர்ந்து பாடல் வீடியோக்களையும், குறும்படங்களையும் இயக்கி ஓடிடியில் வெளியிடுவதற்கு முயற்சி செய்கிறேன்” என்று பாடிவிட்டு அதை டிலேட் செய்தார்.

இயக்குநர் அல்போன்ஸ் புத்தன் அவர்களுடைய இந்த பதிவு மலையாள திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் அவர்களின் இந்த முடிவு குறித்து இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் அவர்களின் இந்த முடிவு குறித்து இயக்குநர் சுதா கெங்கரா அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “டியர் அல்போன்ஸ் புத்ரன். நான் உங்களுடைய சினிமாக்களை மிஸ் செய்யப் போகின்றேன். நீங்கள் இயக்கிய பிரேமம் படம் எனக்கு அப்பொழுது பிடித்த படமாகும்.

நான் சோர்வாக இருக்கும் பொழுது பிரேமம் படத்தைதான் பார்ப்பேன். நான் பிரேமம் படத்தை பலமுறை தொடர்ந்து பார்த்துள்ளேன். காதலில் இருக்க வேண்டும் என்ற சாதனையை மீண்டும் காதல் செய்ய வைக்கும் படமாக பிரேமம் உள்ளது. தயவு செய்து எதாவது ஒரு வடிவத்தில் சினிமாவை தொடருங்கள். நான் அதை ரசித்துக் கொள்கின்றேன். அன்புடன் சுதா” என்று பதிவிட்டுள்ளார்.