நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

0
168
Motorcycle head-on collision in Salem district! Tragically young victim!
Motorcycle head-on collision in Salem district! Tragically young victim!

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே லத்துவாடியை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது  மகன் ஹரிஷ் (17). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே  பகுதியைச் சேர்ந்த தருண்குமார் என்ற வாலிபருடன் மோட்டார் சைக்கிள்ளில் புதுப்பட்டிக்குச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிளை தருண்குமார் தான் இயக்கினார்.

அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பாலத்தில் மோதியது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில்லிருந்து தூக்கி வீசப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்கள் ஹரிஷ்யை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறினார்கள்.

காயம் அடைந்த தருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசாருக்கு  தகவல் தெரிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்பாராத விதமாக  திடீரென்று நடந்த இந்த விபத்து  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஅரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
Next articleபல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!!