சிஎஸ்கே வீரர் சிவம் துபேவின் பிளஸ்சும் மைனஸ்சும்! கேப்டன் தோனி அறிக்கை 

0
205
#image_title
சிஎஸ்கே வீரர் சிவம் துபேவின் பிளஸ்சும் மைனஸ்சும்! கேப்டன் தோனி அறிக்கை
நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை, மும்பை, குஜராத், போன்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டு தங்களது ஆட்டத் திறனை இளம் துடிப்பான வீரர்களை கொண்டு வெற்றி வாகை சூடி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது சென்னை அணியின் துடிப்பு மிக்க வீரராக வளம் வந்து கொண்டிருக்கும் சிவம் துபேவின் பெங்களுர் அணிக்கு எதிரான ஆட்டம் அனைவரும் மெச்சும் அளவிற்கு பேசப்பட்டது.
இதனிடையே சிவம் துபேவின் கடந்த மூன்று ஆட்டங்களில் அவரது ஆட்ட திறன் குறித்து ரசிகர்கள் பலவிதமாக விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதன் முறையாக அவரது ஆட்டம் மற்றும் குறைகளை பற்றியும் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
பெங்ஙளுரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிவம் துபேவின் ஒரு சிக்சர் ரசிகர்களால் மறக்க முடியாத நினைவுகளாக அமைந்துள்ளது, அவரது துடிப்பான ஆட்டத்தால் 111 மீட்டர் தூரம் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கேப்டன் தோனி கூறுகையில், சிறப்பாக சிக்சர்கள் அடிக்கக் கூடிய வீரர்களில் சிவம் துபேவும் ஒருவர்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிவம் துபே பேட்டிங் செய்ய கஷ்டப்படுகிறார். ஆனால் ஸ்பின்னர்களை பொளந்து விடுகிறார். ஐபிஎல் தொடருக்கு முன் சிஎஸ்கே பயிற்சி முகாமில் சிவம் துபேவுக்கு என்று பிரத்யேக திட்டம் வைத்திருந்தோம்.
சிவம் துபே பயிற்சி முகாமிற்கு வந்த போது காயமடைந்துவிட்டார். அதனால் அவருக்கான திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் அதிரடியாக ரன்கள் சேர்ப்பது மிகவும் அவசியம்.
அந்த வேலையை சிறப்பாக சிவம் துபேவால் செய்ய முடியும். அதேபோல் சிவம் துபேவுக்கு திறமை இருக்கிறது என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த திறமை மீது அவரும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் பவுண்டரி லைனுக்கு இந்தப் பக்கத்தில் இருந்துதான் சொல்ல முடியும். பவுண்டரி லைனுக்கு அந்தப் பக்கம் களமிறங்கிய பின், களம் அவருக்கானது. அந்த களத்தில் அவர்தான் எதிர்நீச்சல் போட்டு மீண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
சிவம் துபேவை குரூப்பில் டூப் என்று வர்ணனையில் ஈடுபட்டவர்களே கலாய்த்து வந்த நிலையில், அவர் மீது தோனி நம்பிக்கை வைத்து பேசியது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
Previous articleதமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு!
Next articleமது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா??