தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு!

0
136
#image_title
தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அரசால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் தனியார் சந்தைகளை விட குறைந்த விலையில் தரமான பொருட்களையும், அதே சமயத்தில் பல இலவச பொருட்களையும், அரசின் நிதி உதவிகளையும் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுவதால் எண்ணற்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
தற்போது உள்ள நிலையில் நியாய விலை குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் வட்ட வழங்கல் அலுவலரிடம் சென்று மணிக்கணக்கில் காத்து நிற்கும் பொதுமக்களின் சிரமங்களை குறைப்பதற்காக தற்போது மாதத்திற்கு இரண்டு முறை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களின் குறைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படுகிறது.
நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்க வரும் போது சில சமயங்களில் பொது மக்கள் சில அசவுகரியங்களை பொறுத்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது‌. இந்த நிலையை மாற்ற புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று மதுரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கூறும் போது, நியாய விலை கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விற்பனை செய்தாக வேண்டும்.
அடுத்த ஒரு வருடத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, நியாய விலை கடைகளில் நியாய விலை பொருட்கள் மட்டும்தான் விற்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இலக்கோ அல்லது நியாய விலை அல்லாத பொருட்களையோ விநியோகிக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறோம். மீண்டும் இதை உங்கள் முன்னால் தெளிவுபடுத்தி விடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக, சிறுதானிய ஆண்டு விழாவை முன்னிட்டு, கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூட்டுறவு கடன் சங்கங்களை, ரூரல் மார்ட் ஆகவும் பல்முனை சேவை மையமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளது முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.