பிளஸ் ஒன் பள்ளி மாணவன் தற்கொலை!. அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்?

Photo of author

By Parthipan K

பிளஸ் ஒன் பள்ளி மாணவன் தற்கொலை!. அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்?

அஞ்சுகிராம் அருகே அலகப்பபுரத்தைச் சேர்ந்தவர் தான் ஆல்பர்ட்.இவருடைய மனைவி சகாய சின்சா. இந்த தம்பதி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு வலை  கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஐசக் ஸ்டீபன் வயது பதினாறு என்ற மகனும் இவருக்கு பன்னிரண்டு வயதில் ஒரு மகளும் உள்ளார்.

ஐசக் ஸ்டீபன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ஆல்பர்ட், அவருடைய மனைவியுடன் வலை கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். ஐசக் ஸ்டீபன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார். பின்பு பள்ளிக்குச் சென்ற அவரது சகோதரி நேற்று மாலை வீட்டிற்கு வந்தார்.

பின்னர் அவரது தாயார் வேலை பார்க்கும் கம்பெனிக்கு அழைத்துச் சென்று தன் தங்கையை தாயாரிடம் விட்டுவிட்டு ஐசக் ஸ்டீபன் அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிலிருந்த ஐசக் ஸ்டீபன் திடீரென்று அருகில் இருந்த கயிறை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது பெற்றோர்களுக்கும் மற்றும் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் ஐசக் ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஸ்டீபன் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து ஐசக் ஸ்டீபனின் வீட்டில் அவரது உறவினர்கள் திரண்டார்கள். இந்நிலையில் பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.