பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுடன் இன்று சந்திப்பு நடத்தினார். மேலும் அவர்களுடன் நான் காலை உணவை சாப்பிட்ட தாக கூறப்படுகிறது.
மேலும் ஒலிம்பிக்கில் திறம்பட விளையாடி தங்கம் மற்றும் மற்ற பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்தார் மேலும் பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
டோக்கியோ விளையாட்டுகளில் இந்திய அணி தனது சிறந்த பங்கினை ஆற்றியது என்றும் கூறினார், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மூலம் டிராக் அண்ட் ஃபீல்டில் ஒரு வரலாற்று தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை வென்றது என்று கூறினார்.
மேலும் இதில் நீரஜ் சோப்ரா பிவி சிந்து மீராபாய் மற்றும் இந்திய ஹாக்கி அணி என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.அதில் பிவி சிந்து பெற்ற இரண்டு பதக்கங்களை கையில் வைத்துக்கொண்டு பிரதமர் பிவி சிந்துவிற்கு வாழ்த்து சொல்லும் காட்சிகளும் வெளிவந்துள்ளது.
அதேபோல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுடன் காலை உணவு உட்கொள்ளும் காட்சிகளும் புகை படமாக வெளிவந்துள்ளது.
ஒலிம்பிக்கிற்கு சென்ற இந்திய மல்யுத்த அணியுடன் பிரதமர் மோடி உரையாடினார்.ஆண்கள் ஹாக்கி அணி பிரதமர் மோடிக்கு கையொப்பமிட்ட ஹாக்கி ஸ்டிக்கை வழங்கினர்.