திமுக முன்பு ஆட்சியில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? எடப்பாடி பழனிச்சாமி சரமாரி கேள்வி!

0
82

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சுக்கு அமைச்சர்கள் குறுக்கீட்டு பதிலளித்தார்கள். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும் விரிவாக விளக்கம் கொடுத்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, கடந்த திமுக ஆட்சியில் இருந்தபோது நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் என்று சொன்னீர்களே, அனைவருக்கும் கொடுத்தீர்களா ஏதோ கணக்காக ஒரு சிலருக்கு கொடுத்து விட்டு அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். முழுமையாக யாருக்கும் கொடுக்கப்படவில்லை தற்சமயம் திமுகவின் வாக்குறுதியில் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருக்கிறீர்கள் என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் பேசிய அவர் இருந்தாலும் தற்சமயம் ஏழ்மையான குடும்பம் தலைவிகளுக்கு கொடுக்க இருப்பதை போல பேச்சுக்கள் எழுதுவது தேர்தல் சமயத்தில் ஒரு கருத்தும் தேர்தல் முடிந்த பின்னர் ஒரு கருத்து தெரிவித்து வருகிறீர்களே என பேசியிருக்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி.அவருடைய இந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் தெரிவித்தார்கள். அமைச்சர்கள் ஐ பெரியசாமி மற்றும் ஏ வ வேலு உள்ளிட்டோர்.

அதன் பின்னரும் கூட சத்துணவு திட்டம் குறித்த பிரச்சினை எழுப்பப்பட்டது. சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தது யார் என்பது தொடர்பாக உரையாற்றினார்கள். இதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் தெரிவிக்கும்போது சத்துணவு திட்டம் கொண்டு வந்ததில் நிறைய பேருக்கு பங்கு இருக்கிறது எல்லோரையும் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.