75வது சுதந்திர தின விழா! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

நாடு முழுவதும் இன்றைய தினம் 75 ஆவது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இருக்கின்ற செங்கோட்டையில் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தினவிழாவில் பிரதமர் கொடி ஏற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று அந்த விழாவில் பங்கேற்பதற்காக காரை தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி முதலில் காந்தியடிகள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பிறகு விழா நடைபெற இருக்கும் செங்கோட்டைக்கு வருகை தந்தார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் விஜயகுமார் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றார்கள். அதன்பின்னர் பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார்.

அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்தினார் அந்த சமயத்தில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது அதனை அடுத்து வந்த நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார் தேசியக்கொடியை ஏற்றும்போது முதல் முறையாக இரண்டு விமானப்படை விமானங்கள் மூலமாக மலர்கள் தூவப்பட்டன.

விழாவில் மத்திய அமைச்சர்கள் முப்படைகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் விளையாட்டு வீரர்கள் என்று பலரும் பங்கேற்றார்கள். வழக்கமாக செங்கோட்டையில் ஒவ்வொரு முறையும் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இருப்பார்கள். ஆனால் தற்சமயம் நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு யாரையும் அழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இம்முறை ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் இந்திய விளையாட்டு ஆணையத்தை சார்ந்த முக்கிய அதிகாரிகள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது. நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையை சுற்றி பாதுகாப்பு காரணங்களுக்காக 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேபோல உலகமெங்கிலும் இருக்கின்ற இந்திய தூதரகங்கள் சார்பாகவும் 75வது சுதந்திர தின விழா நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் இருக்கின்ற கட்டிடங்கள் சுற்றுலாத்தலங்கள் மூன்று வர்ணத்தில் ஒளிர வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது.