ஜமைக்கா டெஸ்ட்! பாகிஸ்தான் முன்னிலை!

0
86

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பஹாத் ஆலம் ஐம்பத்தி ஆறு ரன்களும் மற்றும் அஷ்ரப் 44 ரன்களும், பாபர் அசாம் 30 ரன்களும் சேர்த்தார்கள்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் 253 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. பிராட் வைட் 97 ரன்னிலும், ஹோல்டர் 58 ரன்னிலும், வெளியேறினார்கள். பாகிஸ்தான் சார்பாக அப்ரிடி 4 விக்கெட்டுகளும், அப்பாஸ் 3 விக்கெட்டுகளையும், வீழ்த்தினார்கள்.இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தொடக்க வீரர் இம்ரான் டக் அவுட் ஆனார். அபித் அலி 34 ரன்னில் வெளியேறினார் அசார் அலி இருபத்திமூன்று ரன்னிலும் ,பவாத் அலம் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினார்கள்.

ஒருபுறம் விக்கெட் சாய்ந்தாலும் கேப்டன் பாபர் அசாம் மிகவும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கண்டார். அவருக்கு விக்கெட் கீப்பர் ரிஸ்வான் நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். இந்த ஜோடி 56 ரன்கள் எடுத்த நிலையில் ரிஸ்வான் 32 இல் வெளியேறினார். தேனீர் இடைவேளைக்கு பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று நேரம் பாதிப்படைந்தது.

இந்த நிலையில், 3-வது நாள் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து இருக்கிறது. பாபர் அசாம் 54 ரன்னுடன் களத்தில் இருக்கிறார். இதுவரையில் அந்த அணி 124 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் சார்பாக ரோச் 2 விக்கெட்டும், ஹோல்டர் ஒரு விக்கெட்டும், வீழ்த்தியிருந்தார்கள்