சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

0
118

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

சென்னை என்ற 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் இடையே சென்று வர இ-பதிவு கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ-பதிவு இல்லாதவர்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை காவல்துறை அறிவித்தது.

தமிழகத்தில் மொத்த இடங்களில் சென்னை மட்டுமே 25% கொரோனா தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இறப்பு விகிதமும் சென்னையில் தான் அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஊரடங்கை மதிக்காமல் மெத்தன போக்காக இருக்கும் நிலை சென்னை மக்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் செல்லும் இடங்களை சிறு சிறு பகுதிகளாக பிரித்து காவல்துறையினர் கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளனர்.இதனால் சென்னையில் உள்ள பகுதிகளை 348 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வருவதற்கு இ-பதிவு கட்டாயம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று முதல் சென்னையில் மற்ற பகுதிகளுக்கு செல்ல முன்பதிவு கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளனர்.சென்னையில் உள்ள 205 இருசக்கர ரோந்து வாகனங்களும், 305 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும் உரிய காவலர்களை நியமித்து, ஒவ்வொரு காவல் நிலைய ரோந்து வாகனங்கள் குறிப்பிட்ட முக்கிய சந்திப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

அவசர மருத்துவ சிகிச்சக்காக மற்றும் தவிர்க்க முடியாத தேவைக்காக மட்டுமே தவிர வேறெந்த தேவைக்காகவும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறியுள்ளனர்.

கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும், காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது’.

Previous articleகொரோனாவை கட்டுப்படுத்த இந்த இரண்டு மருந்தையும் கொடுக்கலாம்! சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி!
Next articleமேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!