நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் “போலீசார்” !! உச்ச நிதிமன்றம் அதிரடி!!

0
86
"Police" are the main culprits in the brutal incident that brought shame to the country!! Supreme Finance Council action!!
"Police" are the main culprits in the brutal incident that brought shame to the country!! Supreme Finance Council action!!

நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் “போலீசார்” !! உச்சநிதிமன்றம் அதிரடி!!

மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டர்கள்.

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மேலும்  மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய முக்கிய குற்றவாளிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். வன்கொடுமை செய்பட்ட பெண்கள் தரப்பில் வழக்கு பதியப்பட்டது. அதனை தொடர்ந்து தாக்கல் செய்ய வழக்கை உச்ச நீதிமன்றம் தலைமை அமர்வு விசாரித்தது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் தாக்கல் செய்த மனுகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இன்று விசரித்தர்க்ள. அதனை தொடர்ந்து ஆடைகள் இன்றி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட பெண்கள் இடம் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பாதிக்கபட்ட இரண்டு பெண்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜரனார்.

அதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக முதல் அறிக்கையில், ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதும், இரண்டு பெண்களை வன்கொடுமை செய்யும் போது காவல்துறையினர் அங்கு இருந்ததாகவும், அவர்கள் பெண்களை மீட்காமல் உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வன்கொடுமை சம்பவத்திற்கு காவல்துறையினர் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleதமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கம்… இரயில்வே வாரியம் திட்டம்!!
Next articleபுதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!