வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் கமிஷனரின் கடும் எச்சரிக்கை! இனிமேல் இதுதான் வேகம் மீறினால் அபராதம்!
இனிமேல் வாகன ஓட்டிகள் மணிக்கு இந்த வேகத்தை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தற்போது மக்களின் எண்ணிக்கையை போலவே வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. மக்கள் தாங்கள் செல்லும் வேலைக்கு வாகனங்களில் விரைவாக செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். சிறிது தாமதமானாலே வாகனத்தை ஓவர் ஸ்பீடில் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்துவது உண்டு. இதில் ஏராளமான உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. ஆனாலும் பொதுமக்கள் இன்னும் திருந்திய பாடில்லை.
எங்க பார்த்தாலும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதை காண முடிகிறது. சில சமயங்களில் நடந்து செல்பவர்கள் கூட உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அந்த அளவிற்கு தற்போது வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை இயக்குகின்றனர்.
இத்தகைய வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
சென்னையில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை தாண்டி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். மேலும் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறியும் வகையில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதிகரித்து வரும் விபத்தினை குறைக்க மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் என்ற கட்டுப்பாடு மிகவும் அவசியம். சென்னையில் உள்ள 10 இடங்களில் இந்த மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் என்ற கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.