ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் !குட்கா மூட்டைகள் பறிமுதல் !
ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் ஊரக காவல் நிலைய போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த சோதனையில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்க புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் பிடிபட்டவா் வாழப்பாடி வட்டம், பேளூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த நடேசன் மகன் செல்வராஜ் (42) என்பது தெரியவந்தது.மேலும் ஊரக காவல் நிலைய போலீஸார் குட்காவை பறிமுதல் செய்து வாகன ஓட்டியை கைது செய்தனர்.இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 6 குட்கா மூட்டைகளையும் காரையும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட செல்வராஜ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.