கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை!

Photo of author

By Savitha

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் சந்தேகப்படும்படியான வகையில் நான்கு இளைஞர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நேற்று இரவு அந்த அறைக்கு சென்று சோதனை செய்தபோது கேரளாவை சேர்ந்த குபாய்ப், ஜித்து இர்ஷாத் மற்றும் பெங்களூரை சேர்ந்த சிவா ஆகிய நான்கு பேர் இருந்துள்ளனர்.

அவர்களது அறையை சோதனை செய்த பொழுது துப்பாக்கி, எட்டு தோட்டாக்கள், கை விலங்கு செம்பு கலசம் மற்றும் கண் கண்ணாடி 2 ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

ரைஸ் புல்லிங் கலச செம்பு மற்றும் கண்ணாடி அணிந்து பார்த்தால் நிர்வாணமாக தெரியும் எனக் கூறி இரண்டு கண் கண்ணாடிகள் ஆகியவற்றை மோசடியாக யாரிடமோ விற்க முயற்சி செய்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது

இதனை அடுத்து அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து ஒரு கார் நான்கு செல்போன் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.