ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்!

Photo of author

By Kowsalya

ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்!

Kowsalya

Updated on:

ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்!

தனக்கு தோல் வியாதி ஏற்பட்டு உள்ளதால் தன்னை தொட மறுத்த மனைவி மற்றும் பிள்ளைகளை அரிவாளால் தாக்கிய போலீஸ் பின் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தவர் முன்சி சிங் யாதவ். இவருக்கு வயது நாற்பது. இவர் தனது குடும்பத்துடன் மனைவி நிஷா தேவி மற்றும் மகன்கள் இரண்டு பேர் கிருஷ்ணா மற்றும் ஷ்யாம் மற்றும் மகள் சுதா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு திடீரென்று உடம்பில் தோல் வியாதி ஏற்பட்டு உள்ளது. இதனால் மனைவியும் , பிள்ளைகளும் முன்ஷி சிங் யாதவை தொடக்கூட மறுத்துள்ளனர்.. மற்றும் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் முன்சி சிங் யாதவ். தனது மனைவியும் பிள்ளைகளும் தன்னை தொட கூட அஞ்சிய நிலைமையைப் பார்த்து மிகவும் மன வேதனைக்கு உள்ளாகியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று வீட்டின் கூரை அருகே தூங்கிக் கொண்டிருந்த யாதவ் என்ன நினைத்தாரோ! தெரியவில்லை. திடுக்கென்று விழித்த அவர் அருகில் உள்ள மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே நிஷா தேவி உயிரிழந்துள்ளார்.

மேலும் தனது பிள்ளைகளை பலமாக தாக்கியுள்ளார். பிள்ளைகள் சிறு காயத்துடன் தப்பி உள்ளனர். அதுமட்டுமின்றி ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இதன் பின் நடந்த சம்பவத்தை யாதவின் சகோதரர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கவே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.