ரோட்டில் சுற்றித் திரிந்தால் நூதன தண்டனை தரும் போலீஸ் : பாராட்டும் பொது மக்கள்!

0
159

கொரோனா உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை கொன்று வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேர்வதைப் தவிர்க்குமாறு கூறியிருந்தது.

இந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்குமாறு அறிவித்து இருந்தார். மேலும் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதோடு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதில் கூறியிருந்தார்.

இதைப் பொருட்படுத்தாத பொது மக்கள் பொழுதுபோக்க சாலையில் சுற்றித் திரிவதாக புகார்கள் எழுந்தது. அவ்வாறு சாலையில் சுற்றித்திரியும் இளைஞர்களை போலீசார் கண்டித்து அனுப்பியதாக தெரிகிறது.

இளைஞர்கள் இது போல் சுற்றி திரிவதை கண்ட மகாராஷ்டிர போலீஸ் நூதன தண்டனை ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி சாலையில் சுற்றித்திரியும் இளைஞர்கள் பெண்கள் உட்பட அனைவரையும் தோப்புக்கரணம் போட வைத்து சூழ்நிலையை விளக்கி கூறி வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த செயலை பார்த்த பொதுமக்கள் காவல்துறையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Previous articleதிடீரென பிளந்துகொண்ட சாலை! சுனாமி வர வாய்ப்புள்ளதாக தகவல்! எங்கே நடந்தது தெரியுமா.?
Next articleசாலையில் நடமாடினால் சுட்டுத் தள்ளவும் தயங்கமாட்டோம்! கடுமையாக எச்சரித்த தெலுங்கானா முதல்வர்! நடந்தது என்ன.?