தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய நாளை மட்டுமே கடைசி நாள்!! விரைந்து செயல்படுங்கள்!!

Photo of author

By Jayachithra

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடியே இருந்தது. இந்த நிலையில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வி பயில வேண்டும் என்ற நிலை இருந்தது.

மேலும், மாணவர்கள் படிக்கும் திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் என்று நிலையில் திடீரென்று பள்ளிகள் மொத்தமும் இழுத்து மூடப்பட்டன. அதன்பின் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இறுதியாக மாணவர்களின் பொதுத் தேர்வுகளும் மொத்தமாக ரத்து செய்யப்பட்டன.

கொரோனா காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் றது செய்யப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டது. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் பயில விண்ணப்பித்து வருகின்றனர்.

மேலும், இந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஐடிஐ மற்றும் தனியார் ஐடிஐ யில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பம் பதிவு கடந்த மாதம் தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. மேலும், மாணவர்கள் நலன் கருதியும், கூடுதல் மாணவர்களை சேர்க்கும் வகையிலும் விண்ணப்ப பதிவு நாளை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவர்கள் tngptc.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் விண்ணப்பித்து வரும் மாணவர்களுக்கு நாளை மட்டுமே வாய்ப்பு உள்ளது, நாளையோடு விண்ணப்ப பதிவு முடிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.