தேர்வு நடத்த முடியாத காரணத்தால் 1 முதல் 9ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்.!! புதுவை மாணவர்கள் மகிழ்ச்சி! (முழுத்தகவல்)

Photo of author

By Jayachandiran

தேர்வு நடத்த முடியாத காரணத்தால் 1 முதல் 9ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்.!! புதுவை மாணவர்கள் மகிழ்ச்சி! (முழுத்தகவல்)

Jayachandiran

தேர்வு நடத்த முடியாத காரணத்தால் 1 முதல் 9ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்.!! புதுவை மாணவர்கள் மகிழ்ச்சி!

கொரோனா வைரஸ் நாடு முழுக்க பரவி வருவதால் மாணவர்களுக்கான இறுதி ஆண்டுத் தேர்வு நடத்த முடியவில்லை. இதன் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி கல்விதுறை வெளிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது; (புதுச்சேரியின் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு இன்று வெளியிட்ட உத்தரவு)

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகின்ற ஏப்ரல்
14 ஆம்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதனால் மாணவர்களுக்கான இறுதி ஆண்டுத்தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான் மாணவர்களுக்கு இறுதித் தேர்வு புதுவையில் ரத்து செய்யப்படுகிறது. ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்திலும் 11 ஆம் வகுப்புக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல் நேற்று அரை மணிநேரம் தாமதமாக தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நேற்றோடு முடிவடைந்தது. மேலும் போக்குவரத்து முடங்கியதால் நேற்று 34,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.