பொங்கல் பரிசு தொகுப்பு! வெளிவந்த முக்கிய தகவல்!
தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருவிழாவை கொண்டாடுகிறோம். இது தமிழர்களுக்கே உரித்தான நாளாக பேசப்படுகிறது. தமிழக அரசு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்பை தருவது வழக்கம். சென்ற முறை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு பொங்கல் வைப்பதற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் பணம் போன்றவை பரிசாக வழங்கினர்.
இம்முறை திமுக ஆட்சி அமர்த்தி உள்ளது. இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மட்டுமே பொங்கல் தொகுப்பு பரிசாக திமுக அரசு வழங்கியுள்ளனர். பணம் வழங்காததால் பல மக்கள் வருத்தம் தெரிவித்தனர். அரசாங்கம் வழங்கும் அந்த இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பும் தரமற்றதாக உள்ளது என பல புகார்கள் வந்தது. அதுமட்டுமின்றி தமிழக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வரும் வேளையில் பொங்கல் தொகுப்பில் வழங்கிய பொருட்களை மட்டும் வட மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டது ஏன்? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.அந்தப் புகார்கள் வராமலிருக்கும் வகையில் முதலமைச்சர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து நியாயவிலை கடைகளிலும் சோதனை நடத்தினர்.
பொங்கல் பண்டிகை முடிந்த நிலையிலும் பலர் இன்று வரை பொங்கல் தொகுப்பு வாங்காமல் உள்ளனர். வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்கள் பொங்கல் நாட்களாக கொண்டாடப்பட்டது. அச்சமயங்களில் நியாய விலை கடைகள் முதல் அனைத்தும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இன்று திங்கட்கிழமை அரசு விடுமுறை நாளாக அறிவிப்பு வெளிவந்தாலும் நியாயவிலை கடைகளுக்கு வேலை நாட்களாக உத்தரவிட்டுள்ளனர். பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள் இன்று சென்று வாங்கி கொள்ளலாம் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த மாதம் இறுதி வரை மக்கள் பொங்கல் தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.