பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து பண்டிகைகளையும் மக்கள் அதிகளவு கொண்டாடவில்லை. மிக எளிமையான முறையில் தான் கொண்டாடினார்கள்.தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் தீபாவளி பண்டிகையை மிக உற்ச்சாகத்துடன் கொண்டாடினார்கள்.அதே போல இந்த வாரம் கிறிஸ்துவர்கள் அனைவரும் வெகு சிறப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
மேலும் வரும் ஜனவரி மாதம் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாட தயாராகி வருகின்றனர்.மேலும் அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் என அனைத்து போட்டிகளும் நடைபெறுவது வழக்கம் தான்.அதனை தொடர்ந்து எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது என்பது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கியது.ஆனால் அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்தது என பல்வேறு புகார்கள் எழுந்தது.அதனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு என்றாலே அதில் கரும்பு இடம்பெற்றிருக்கும் ஆனால் நடப்பாண்டில் கரும்பு கொள்முதல் பற்றி அரசிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என விவசாயில்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ 1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் நேற்று அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 2 ஆம் தேதி அன்று சென்னையில் முக ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.
மேலும் அன்று மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ 1000 வழங்கப்பட்டது.தற்போது 2022 ஆம் ஆண்டும் ரூ 1000 வழங்குவது குறிப்பிடத்தக்கது.