நாளை முதல் பொங்கல் லீவ்! ‘கூடுதல் விடுமுறை’ மக்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு?
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணி புரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊரில் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக விடுமுறை அளிக்கப்படும்.அதுமட்டுமின்றி பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கி நேற்று முதல் அனைத்து இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கம் தொடங்கி விட்டது.
சிறப்பு பேருந்துகள் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 1 லட்சத்திற்கு மேல் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் போகி பண்டிகை,மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை தினங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொங்கல் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட செல்ல ஏதுவாக இன்றும் மீண்டும் பொங்கல் முடிந்து பணிக்கு திரும்ப ஏதுவாக இருக்க ஜனவரி 18 ஆம் தேதியும் கூடுதலாக சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில் முன்னதாகவே பலரும் விடுப்பும் எடுத்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால் இன்று விடுமுறை அறிவிக்காத நிலையில் வரும் ஜனவரி 18 தேதி விடுமுறை அளிக்கப்படுமா என சந்தேகங்களும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.