தமிழகத்தில் 100 கோடி வசூலை எட்டிய பொன்னியின் செல்வன்… ஐந்தே நாளில் மைல்கல் சாதனை!

0
260

தமிழகத்தில் 100 கோடி வசூலை எட்டிய பொன்னியின் செல்வன்… ஐந்தே நாளில் மைல்கல் சாதனை!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகளவில் முதல் நாளில் மட்டும் 80 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வெளியாகி வெற்றிகரமாக முதல் வார இறுதியான 3 நாட்களில் 200 கோடி ரூபாயை தாண்டி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது பொன்னியின் செல்வன். தமிழகத்தைப் போல மற்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த வசூல் தொகை சற்று ஆச்சர்யமளிப்பதாகவும் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 5 நாட்களில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை 5 நாட்களில் எட்டியுள்ளது. இந்த 100 கோடி ரூபாய் கிளப்பில் வலிமை, பீஸ்ட், விக்ரம் மற்றும் கேஜிஎப் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது படமாக பொன்னியின் செல்வன் இணைந்துள்ளது. விரைவில் விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஇந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு!
Next articleபொன்னியின் செல்வன் ‘விக்ரம்’ பட சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி… கமல் பெருந்தன்மை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here