Poochi kadi : வண்டு முதல் பூரான் வரை.. அனைத்து பூச்சு கடிகளையும் குணமாக்கும் பவர்புல் வீட்டு மருந்து!!

Photo of author

By Divya

Poochi kadi : வண்டு முதல் பூரான் வரை.. அனைத்து பூச்சு கடிகளையும் குணமாக்கும் பவர்புல் வீட்டு மருந்து!!

பூச்சு கடி பாதிப்பால் அவதியடைந்து வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி குணப்படுத்திக் கொள்ளவும்.

அனைத்து பூச்சு கடிகளையும் குணமாக்கும் எளிய வீட்டு மருத்துவம் : Poochi kadi treatment in tamil

1) வண்டு கடி

எந்த வகை வண்டு கடித்தாலும் ஒரு வெள்ளை பூண்டை தோல் நீக்கி நசுக்கி கடித்த இடத்தில் பூசினால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.

அதேபோல் சிறிது குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து வண்டு கடித்த இடத்தில் பூசி வந்தால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.

2) பூரான் கடி

ஒரு கைப்பிடி குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி பூரான் கடித்த இடத்தில் பூசி வந்தால் அதன் விஷம் முறியும்.

3) கம்பளிப்பூச்சி கடி

ஒரு வெற்றிலையை உரலில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் பூசினால் உடனடி பலன் கிடைக்கும்.

4) எலிக்கடி

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிறிது விளாமரத்தின் பூவை போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் எலிக்கடி விஷம் முறியும்.

5) தேனீ கடி

ஒரு துண்டு புளியை இடித்து தேனீ கொட்டிய இடத்தில் வைத்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.

6) குழவிக் கடி

எந்த குழவி கொட்டினாலும் ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்து அப்ளை செய்து வந்தால் ஒரே நாளில் பலன் கிடைத்துவிடும்.

7) தேள் கடி

ஒரு கிண்ணத்தில் சிறிது சுண்ணாம்பு,இடித்த மிளகு மற்றும் அரைத்த குப்பைமேனி இலையை சேர்த்து கலந்து தேள் கடித்த இடத்தில் அப்ளை செய்து வந்தால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.

8) பாம்புக்கடி

ஒரு வெற்றிலையில் 4 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பாம்பு விஷம் முறியும்.