சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!!

Photo of author

By Divya

சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக உள்ள சித்திரை சுப மாதம் ஆகும்.கடந்த ஞாயிறு அன்று தான் இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கியதும்.இந்நிலையில் சித்திரை மாதத்தில் வரக் கூடிய முதல் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாருக்கு இந்த பூஜை செய்தால் நிச்சயம் பண விஷயத்தில் கஷ்டம் ஏற்படாது.

இன்று சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.இந்த நாளில் மாலை 6 மணிக்குள்ளாக கீழே சொல்லப்பட்டுள்ளபடி மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்ய வேண்டும்.

முதலில் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறையை சுத்தப்படுத்திக் கொள்ளவும்.பிறகு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து மல்லி பூவில் மாலை சாற்றவும்.

அதன் பின்னர் மகாலட்சுமிக்கு உகந்த பொருட்களை நெய்வேத்தியமாக வைக்கவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் 3 கருப்பு ஏலக்காய்,1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் ஒரு பச்சை கற்பூரத்தை போட்டு மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விடவும்.

இவ்வாறு செய்த பின்னர் பண வரவு அதிகரிக்க வேண்டும்.கடன் பிரச்சனை,பணப் பிரச்சனை நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரிய வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரை மனமுருகி வணங்கவும்.

அதன் பிறகு ஒரு வெள்ளை காட்டன் துணி எடுத்து அதனுள் இந்த கருப்பு ஏலக்காய்,பெருஞ்சீரகம் மற்றும் பச்சை கற்பூரத்தை வைத்து முடிச்சி போட்டு பணம் உள்ள இடத்தில் வைக்கவும்.இதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி விட வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பண வரவு அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ தொடங்குவீர்கள்.