பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் பெங்களூரில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது விபத்து!

Photo of author

By Savitha

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் பெங்களூரில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது விபத்து. காயம் ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பை ரத்து செய்து சஞ்சய் தத் மும்பை புறப்பட்டுச் சென்றார்

கே.டி என்ற கன்னட படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு மாகடி சாலையில் உள்ள சிகேஹல்லி நடைபெற்று வந்தது.

இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெடிகுண்டு வெடித்த போது படப்பிடிப்பு தலத்தில் இருந்த கண்ணாடி உடைந்து அதன் துகள்கள் சஞ்சய் தத்தின் முகத்தை தாக்கியுள்ளது.

இதில் அவரது முகத்தில் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தவை தொடர்ந்து உடனடியாக அவர் படப்பிடிப்பை ரத்து செய்து முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த விபத்து இரண்டு நாட்கள் ஆனதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த விவகாரம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.