அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை!

0
261
#image_title

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை.

நீதிமன்றத்திற்கு அழுத்தம் தரும் வகையில் மாநில, தேசிய தலைவர்களை அழைத்து வந்து மேல்முறையீடு மனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார்.

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் புர்னேஷ் மோடி சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் பதில் மனு.

மேலும் அந்த பதில் மனுவில், கருத்து சுதந்திரம், விமர்சனம் என்ற பெயரில் பிறரை புண்படுத்தும் வகையில் ராகுல் காந்தி தொடர்ந்து பொறுப்பற்ற, அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைப்பது நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றாலும் தற்போதைய நிலையில் இந்த சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை.

நாளை விசாரணை நடைபெறவுள்ள நிலையில், புகார்தாரர் புர்னேஷ் மோடி சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோலாரில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில், அனைத்து கொள்ளையர்களும் மோடி என்ற குலப்பெயரையை ஏன் கொண்டிருக்க வேண்டும் என பேசியதற்காக அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல்
நீதிமன்றம் கடந்த 23-ஆம் தேதி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து.

author avatar
Savitha