கலவர பூமியான அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரம்

Photo of author

By Parthipan K

கலவர பூமியான அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரம்

Parthipan K

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் போர்ட்லேண்ட் நகரில் கடந்த மூன்று வாரங்களாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினர் தொடர்ந்து போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போர்ட்லேண்ட் நகரில் வழக்கம்போல் போராட்டத்தில் ஈடுபட்ட ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினர் அங்குள்ள போலீஸ் சங்கம் கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.

டிரம்பின் ஆதரவாளர்கள் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ட்லேண்ட் நகரில் பேரணி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், டிரம்பின் ஆதரவாக இருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் பாட்டில்கள், கற்கள் மற்றும் மிளகு பொடி உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் போர்ட்லேண்ட் நகரம் முழுவதும் கலவர பூமியானது.
அதேசமயம் கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.