ரூ.7லட்சம் வரை வருமானம் தரும் தபால் துறையின் புதிய திட்டம்!! இது ஆரம்பம் தான்!!

Photo of author

By Jayachithra

இன்றைய காலத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறி இருக்கிறது. நாம் சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு வழியில் சேமித்து வைத்தால் மட்டுமே வருங்காலத்தில் அது நமக்கு உதவும். மேலும், இதற்கு தபால் அலுவலகங்களிலும் அல்லது வங்கிகளிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்திய தபால் துறையில் பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று கிராமங்கள் கிராம் சுமங்கல் கிராமின் யோஜனா திட்டம். இந்தத் திட்டமானது கிராம மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

மேலும் இதில் ஆறு பிரிவுகளாக காப்பீடு ஆனது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு வயது வரம்பு 19 வயது முதல் 45 வரை ஆகும். 20 வருடங்களில் ரூபாய் 7 லட்சம் காப்பீடு உங்களுக்கு கிடைக்க நீங்கள் மாதத்திற்கு 2853 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து தினமும் 95 ரூபாய் செலுத்த வேண்டும் அல்லது 15 வருட பாலிசியில் ஆறு மாதம் மற்றும் ஒன்பது மாதம், 12 மாதம் என்று 20% கேஷ்பேக் கிடைக்கும்.

ஒருவேளை 20 வருட பாலிசியை நீங்கள் தேர்வு செய்தால் 8, 12 மற்றும் 16 மாதங்களில் கிடைக்கும். உங்களுடைய 25வது வயதில் 20 வயது முதிர்வு கொண்ட பாலிசி எடுத்தால் 20 வருடங்களில் 14 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும். ஒருவேளை இந்த திட்டத்தில் இணைந்த பாலிசிதாரர் அவரது முதிர்வு காலத்திற்கு முன்னே இறந்துவிட்டால், அவருடைய நாமினிக்கு உதவித்தொகை மற்றும் போனஸ் தொகை வழங்கப்படும்.

இதன் மூலமாக மக்கள் சேமிப்பதை தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் சேமிக்கவும் கற்றுக்கொள்வார்கள். எனவே, இந்த திட்டத்தினை இன்றே போய் அனைவரும் செயல்படுத்த வேண்டும்.