உருளைக்கிழங்கு பர்ஃபி! இப்படி செய்தால் அதன் ருசியே தனி!

0
256

உருளைக்கிழங்கு பர்ஃபி! இப்படி செய்தால் அதன் ருசியே தனி!

தேவையான பொருட்கள் :உருளைக்கிழங்குகால் கிலோ சர்க்கரை கால் கிலோ ரவை 100 கிராம் நெய் மூன்று டேபிள் ஸ்பூன் பொடியாக்கி ஏலக்காய்.

செய்முறை :  ரவையை மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவேண்டும்.உருளைக்கிழங்கை வேக வைத்து கட்டிகளில்லாமல் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அதில் மசித்து வைத்துள்ள கிழங்கையும், சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் வைத்து அடிபிடிக்க விடாமல் நன்றாக கிளற வேண்டும்

உருளைக்கிழங்கு கலவை நன்கு கொதித்து வரும் போது வறுத்து வைத்த ரவையை சிறிது சிறிதாக மேலே தூவி கட்டிகள் விழாமல் நன்கு கிளற வேண்டும்.கலவை நன்கு திரண்டு வரும் போது ஏலக்காய் தூள் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும், துண்டுகளாக வெட்டவும். இப்போது சுவையான உருளை பர்ஃபி தயாராகிவிடும்.

 

 

Previous articleபெண்களே ரகசிய கேமரா குறித்து அச்சமா? இதோ மறைக்கப்பட்ட கேமராவை கண்டறிய டிப்ஸ்
Next articleஆணுறுப்பு விறைக்காமல் போவதற்கு இத்தனை காரணங்களா? தெரிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here