பெண்களே ரகசிய கேமரா குறித்து அச்சமா? இதோ மறைக்கப்பட்ட கேமராவை கண்டறிய டிப்ஸ்

0
200

பெண்களே ரகசிய கேமரா குறித்து அச்சமா? இதோ மறைக்கப்பட்ட கேமராவை கண்டறிய டிப்ஸ்

 

அரசு பெண்களின் பாதுகாப்பு கருதி எவ்வளவு சட்டங்கள் இயற்றினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இன்னும் பெண்கள் பொது இடங்களில் ஏதோ ஒரு அச்சத்துடனேயே சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

 

இதில் குறிப்பாக உடை எடுக்க துணிக்கடை செல்லும் போது பெண்கள் அங்குள்ள ட்ரெயல் ரூம்களை பயன்படுத்துவது மற்றும் ஹோட்டலுக்கு செல்லும்பொழுது உடை மாற்றுவது உள்ளிட்டவைகள் பாதுகாப்பானதா என்று அவர்கள் சந்தேகிக்கும் வகையில் தான் இன்னமும் சூழ்நிலை இருந்து வருகிறது.

 

பெண்களுக்கு உண்டாகும் அப்படிபட்ட சந்தேகங்களுக்கு தீர்வு தரும் வகையில் நீங்கள் உடை மாற்றும் இடத்தில் ரகசிய கேமரா ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிய சில வழிகளை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் வெளியில் செல்லும் போது ஓட்டலில் தங்குவதாக இருக்கும் பட்சத்தில் அறையில் வழக்கத்திற்கு மாறாக ஏதாவது வித்தியாசமான பொருட்கள் இருக்கிறதா என்று நன்றாக கண்காணிக்க வேண்டும். சுவரின் மூலையில், கதவுகள், மின்விளக்கு, அறையின் மேற்கூரை, சுவர் கடிகாரம், புகைப்பட ஃபிரேம், கண்ணாடி, பூந்தொட்டி, டிஷ்யூ பேப்பர் பெட்டி என அனைத்து இடங்களிலும் ரகசிய கேமராவை பொருத்த முடியும்.தொழில்நுட்பம் வளர்ந்த காரணத்தால் இந்த அளவிற்கு சிறிய கேமராக்கள் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது.

 

பெரும்பாலான அறைகளில் எல்இடி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். எனவே, அந்த குறிப்பிட்ட அறையில் இருக்கும் அனைத்து லைட்களையும் அனைத்து விட்டால் கேமராவை சுலபமாக கண்டறிய முடியும். யாருக்காவது போன் செய்து பேசிக்கொண்டே அறையை நன்றாக சுற்றி வர வேண்டும். இவ்வாறு மொபைல் போனில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் கேமரா அருகில் வந்தால் அங்கு மறைமுகமாக பொருத்தப்பட்ட சர்வைலன்ஸ் கேமராக்கள் சத்தமிடும்.

 

அறையில் இருக்கும் விளக்குகளை எல்லாம் அனைத்து விட்டு மொபைல் ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்து அறையை சுற்றி அடிக்க வேண்டும். இப்படி செய்யும் போது ஏதாவது ரெப்லக்ஷன் உருவானால் அங்கு ரகசிய கேமரா இருக்க அதிக வாய்ப்புள்ளது.

 

இறுதியாக பாத்ரூம் கண்ணாடியில் விரல்களை வைத்து பார்க்க வேண்டும். உங்கள் விரல்களுக்கும், கண்ணாடிக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அங்கே ரகசிய கேமரா இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.