உச்சி முதல் பாதம் வரை அனைத்து நோய்களையும் குணமாக்கும் பவர்புல் நாட்டு வைத்தியம்!!
உடல் நல பாதிப்புகளை செலவின்றி குணப்படுத்த விரும்புபவர்கள் கீழ்க்கண்ட நாட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றலாம்.
1)பொடுகு
தயிரில் வெந்தயப் பொடியை கலந்து தலைக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
2)சொரியாசிஸ்
வேப்பிலையை அரைத்து தலை முழுவதும் பூசி குளித்து வந்தால் சொரியாசிஸ் பாதிப்பு குணமாகும்.
3)பல் வலி
வெள்ளைப் பூண்டை நசுக்கி வலி உள்ள பல் மீது பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.மிளகை இடித்து பல் தேய்த்தால் வலி குறையும்.
4)நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
மாதுளம் பழத்தை ஜூஸாக அரைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
5)தொண்டை கரகரப்பு
சுக்கு,மிளகை தட்டி போட்டு கசாயம் செய்து பருகினால் தொண்டை கரகரப்பு பாதிப்பு குணமாகும்.
6)விக்கல்
பெரிய நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து பருகினால் விக்கல் பாதிப்பு குணமாகும்.
7)அஜீரணக் கோளாறு
கறிவேப்பிலை,சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த பானத்தை பருகினால் அஜீரணக் கோளாறு சரியாகும்.
8)மலசிக்கல்
செம்பருத்தி பூவை நன்றாக உலர்த்தி பொடியாக்கி தேநீர் செய்து பருகி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.
9)தேமல்
பூண்டு மற்றும் வெற்றிலையை சம அளவு எடுத்து இடித்து தேமல் மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகும்.
10)தீப்புண்
ஒரு வாழைத் தண்டை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தீப்புண் மீது பூசினால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.
11)சரும நோய்
ஆரஞ்சு பழத் தோலை காயவைத்து பொடித்து சருமத்தில் அப்ளை செய்து குளித்து வர தோல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
12)பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலையை காயவைத்து பொடித்து ஆலிவ் எண்ணெயில் கலந்து பித்த வெடிப்புகள் மீது பூசினால் சீக்கிரம் குணமாகும்.அதேபோல் கற்றாழை ஜெல்லை பித்த வெடிப்பு மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகும்.