முதல்வர் செய்த காரியத்தால் மக்களிடையே குவியும் பாராட்டுகள் !!

Photo of author

By Parthipan K

முதல்வர் செய்த காரியத்தால் மக்களிடையே குவியும் பாராட்டுகள் !!

பொதுவாகவே அரசியல் தலைவர்கள், முதல்வர்கள், பிரதமர் ,அமைச்சர்கள் போன்றவரை பாதுகாக்க பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காத்திருப்பில் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை முக்கிய தலைவர்களுக்காக போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுவதும், மக்கள் காத்திருக்க வைக்கப்படுவதும் போன்ற சூழலும் கூட அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது செய்த காரியம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.விமானம் மூலம் கன்னாவரம் வந்த முதல்வர், தன்னுடைய வீடு அமைந்திருக்கும் தடப்பள்ளி பகுதிவரை காரில் செல்வது வழக்கம்.

அதே நேரத்தில் விஜயவாடாவை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்ல காத்துக் கொண்டிருந்தார்.

ஆம்புலன்ஸ் இருப்பதை கண்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனடியாக ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்காக பாதுகாத்து வந்த வழியில் இருந்து விலகி ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டனர். அவர் பிறகு பத்திரமாக மருத்துவமனைக்கு சென்றார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களில் இந்த துரித நடவடிக்கை மற்றும் உத்தரவு, மக்களிடையே பலரது வாழ்த்துகளை பெற்று வருகின்றனர்.