மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கும் ஆபத்து ?

0
57

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருகுறிப்பிட்ட வயதை கடந்தாலோ, அல்லது மத்திய அரசு பணியை நிறைவு செய்தாலோ, அவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் வயது 50 முதல் 55 வயதை கடந்தாலோ அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தாவர்கள் ,எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டே மத்திய அரசு ஒரு அரசாணையை வெளியட்டிருந்தது. ஆனால், அதில் குறிப்பிட்ட சில அம்சங்களின் குழப்பம் ஏற்பட்டதால் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து அனைத்துக் குழப்பங்களுக்கும் விளக்கமளிக்கும் வகையில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 28 ஆம் தேதியன்று ஒரு புதிய சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.

அதில் 50 முதல் 55 வயதை கடந்தவர்கள் அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு, எந்த நேரத்திலும் பொதுநலன் கருதி பணி ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது ,என்றும் மேற்குறிப்பிட்டுள்ள வயது அல்லது பணியாளரின் அனுபவம் கொண்டவர்கள் ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பணியில் தொடரலாம் என சான்று அளிக்கப்பட்டபவர்கள் அனைவருக்கும் இந்த புதிய விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது என்று சுற்றறிக்கையில் கூறியுள்ளது. எந்த நேரம் வேண்டுமானாலும் தகுதி ஓய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் ஒருவேளை அந்த ஆய்வில் அவரது தகுதி குறைந்து இருப்பது தெரியவந்தால் பணி ஓய்வு வழங்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளது.

author avatar
Parthipan K