முதல்வரின் தன்மானத்தை சீண்டிய முக்கிய அரசியல் கட்சி! கடும் கோபத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அதிமுக தேமுதிக கூட்டணி தொடர்ந்து வ வந்தது இந்தநிலையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே கூட்டணியில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்த தொடங்கிவிட்டது.அதன் ஒரு பகுதியாக தான் கூட்டணியில் இருந்து கொண்டே நாங்கள் தனித்து நிற்பதற்கும் தயார் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பது போன்ற கருத்துக்களை தேமுதிக தெரிவித்து இருந்தது.

அப்படி தெரிவித்தாலும் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு அந்த சமயத்தில் தயாராக இல்லை என்று சொல்லப்பட்டது. ஆகவே கூட்டணிக்கு இருந்து கொண்டே அதிமுகவை மறைமுகமாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்த தொடங்கியது.தேமுதிகவின் இதுபோன்ற செயல்களை கூர்ந்து கவனித்த எடப்பாடி பழனிச்சாமி எதிர்காலத்தில் இந்த கட்சி நம்முடைய எலக்ட்ரிக் எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கும் என்பதை ஆராயத் தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக மாநில உளவுத் துறையின் மூலமாக தமிழகம் முழுவதிலும் அந்த கட்சிக்கு உள்ள ஓட்டு சதவீதம் எவ்வளவு என்பதை கணக்கு எடுத்தார். அதில் வெறும் 2 சதவீத ஓட்டுகள் தான் தேமுதிக பெறும் என்று ரிப்போர்ட் வந்தது.இதன் காரணமாக, நிம்மதி அடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதன் பிறகு தேமுதிகவை பெரிய அளவிற்கு கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

இன்றைய நிலையில், தேர்தல் நெருங்கியதும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது. அதிமுக அதில் முதலாவதாக இடம் பிடித்தது பாட்டாளி மக்கள் கட்சி அந்த கட்சிக்கு இந்த கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சு வார்த்தை தொடங்கியது. அதிமுக அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பாஜகவிற்கு தமிழகத்தில் சுமார் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் தேமுதிகவை இந்த விஷயத்தில் அதிமுக தலைமை கண்டுகொள்ளவே இல்லை என சொல்லப்பட்டது.

ஒருவழியாக பாஜகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடித்துக்கொண்ட கையோடு தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்தது அதிமுக. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் தேமுதிக அதிக இடங்களை எதிர் பார்த்த காரணத்தால், அந்த இரு கட்சிகளுடனும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.


இந்த நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிமுக தேமுதிகவிற்கு 12 தொகுதிகளை கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டது. ஆனால் தேமுதிக இன்னும் அதிக தொகுதிகளை கேட்டு பிடிவாதமாக இருந்தது.ஆனால் அதிமுக தலைமை 12 தொகுதிகளுக்கு மேலும் ஒரு தொகுதி கூட கொடுப்பதற்கு தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது அதன் விளைவாக தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில் முதல்வரிடம் பத்திரிக்கையாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது தேமுதிகவிற்கு போதுமான அளவிற்கு பக்குவம் இல்லை என்று தெரிவித்திருந்தார். அதோடு அவர்களுடைய வாக்கு சதவீதம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப தான் நாங்கள் அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி இருந்தோம் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இடம் கேள்வி எழுப்பியபோது அவரோ முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிச்சாமி இடம் இல்லை எனவும் அவர் எவ்வாறு இந்த பதவிக்கு வந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம் அந்த பக்குவம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இதனால் முதல்வர் தேமுதிக தலைமை மீது கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.