அரசியலை விட்டு விலகும் முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

0
59

தமிழகத்திலேயே சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது இதன் காரணமாக, ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தங்கள் கட்சிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் அதிமுக சார்பாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அந்த விதத்தில் அதிமுகவில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த பலருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக, அந்த கட்சியில் பல்வேறு குழப்பங்களும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.அதோடு தமிழகம் முழுவதிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இது எதையுமே அதிமுக தலைமை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

அதேபோல விருதாச்சலம் ஜெயங்கொண்டம் போன்ற முக்கிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு உருவாக்கியதற்காக அதிமுக சார்பாக அந்த கட்சியின் தொண்டர்களும் முக்கிய நிர்வாகிகளும் ஆங்காங்கு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதேசமயம் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு தொகுதிகள் மறுக்கப்பட்டு இருப்பதற்காகவும் போராட்டங்கள் செய்து வருகிறார்கள்.இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டசபைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் களம் காண இருக்கின்றார். அதேபோல அதிமுக கூட்டணியில் தற்போது சட்டசபை உறுப்பினராக இருந்து வரும் சத்யா பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக அதிருப்தி அடைந்த பண்ருட்டி சட்டசபை தொகுதியில் அதிமுக சட்டசபை உறுப்பினர் சத்யா மற்றும் அவருடைய கணவர் பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்கள் இது அந்த பகுதியில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது அதோடு வெகுகாலமாக கட்சியில் இருந்து மக்கள் பணியாற்றி வந்த இந்த இருவரும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது அதிமுக அதற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவை தந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து சட்டசபை உறுப்பினர் சத்யா தெரிவித்திருப்பதாவது அதிமுகவின் மறுபடியும் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் நெருங்கி கொண்டே வரும் சமயத்தில் பண்ருட்டி சட்டசபைத் தொகுதியில் இப்பொழுது சட்டசபை உறுப்பினராக இருக்கும் சத்யா பன்னீர்செல்வம் அவர்கள் தனக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக சொரத்தூர் ராஜேந்திரன் அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.இதன் காரணமாக, தற்போது சட்டசபை உறுப்பினராக இருந்த வரும் சத்யா பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ஆகவே சத்யா பன்னீர்செல்வம் அவர்களும் மற்றும் அவருடைய கணவரும் அரசியலில் இருந்து விலகுவதாக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார் இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது பண்ருட்டி சட்டசபை தொகுதியில் சென்ற 25 வருடங்களில் அரசியல் சார்ந்த பல பெரிய மனிதர்களை சமாளித்து அவர்கள் செய்ய முடியாது பல திட்டங்களையும் செய்து காட்டி இருப்பதன் மூலமாக ஜாதி மதம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எல்லாத் தரப்பு மக்களிடமும் அன்பையும் ஆதரவையும் நாங்கள் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே எங்களுடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் வைத்து புதுவாழ்வு மற்றும் அரசியலில் இருந்து நாங்கள் விடைபெற இருக்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்து இருப்பதாக சொல்கிறார்கள்.